எத்தனை பேருக்கு முத்தம் கொடுத்தீங்க… எக்குத்தப்பான கேள்விக்கு நாகசைதன்யாவின் பதில்!

  • IndiaGlitz, [Friday,May 05 2023]

தெலுங்கு சினிமாவின் இளம் நாயகன் நடிகர் நாகசைதன்யாவிடம் இதுவரை எத்தனைப் போருக்கு முத்தம் கொடுத்து இருக்கிறீர்கள் என்றொரு வித்தயிசமான கேள்வி எழுப்பட்ட நிலையில் அதற்கு அவரும் பொறுமையாகப் பதிலளித்துள்ளார். இந்தத் தகவல் தற்போது சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் நாகசைதன்யா நடித்துமுடித்துள்ள ‘கஸ்டடி‘ திரைப்படத்தின் பரமோஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக நடிகர் நாகசைதன்யா நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட போது இதுவரை எத்தனை பேருக்கு முத்தம் கொடுத்து இருக்கிறீர்கள் என்று வித்தியாசமாகக் கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. இந்தக் கேள்விக்கு கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத நடிகர் நாகசைதன்யா கணக்கில் வைத்துக்கொள்ளவில்லை. இதுவரை படத்திலேயே பல முத்தக் காட்சிகளில் நடித்துவிட்டேன். எப்படி கணக்குப்போட முடியும் என்று மறுகேள்வி கேட்டு அசர வைத்திருக்கிறார்.

மேலும் உங்களின் ரகசிய க்ரஷ் யார் என்றொரு கேள்வியும் அவரிடம் எழுப்பப்பட்டு இருக்கிறது. இதற்குப் பதிலளித்த நாகசைதன்யா இதிலென்ன ரகசியம்? நான் சமீபத்தில் பாபிலோன் எனும் ஹாலிவுட் திரைப்படம் பார்த்தேன். அதில் நடித்திருந்த மார்கோ ராபி மிக அருமையாக நடித்திருந்தார். அவர் மீதும் அவருடைய நடிப்பு மீதும் எனக்கு க்ரஷ் வந்துவிட்டது என்று சொல்லி மேலும் அங்கிருந்தவர்களை மிரள வைத்திருக்கிறார்.

பொதுவாக முத்தம் குறித்த கேள்விகளைக் கேட்டால் நடிகர், நடிகைகள் பலரும் பதிலளிக்க விரும்பாமல் நகர்ந்துவிடுவர். ஆனால் நடிகர் நாகசைதன்யா எக்குத்தப்பான கேள்விகளுக்கு கோபமில்லாம் விளையாட்டாக பதிலளித்து இருப்பது ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது.

More News

நீண்ட காலமாக கிடப்பில் இருந்த விஜய்சேதுபதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..

நீண்டகாலமாக கிடப்பில் இருந்த விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் ஒன்றின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதுவா? 

சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான 'மாவீரன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர்.

கவின் அடுத்த படத்தில் சூப்பர்ஹிட் படத்தின் நாயகி.. மிஷ்கின் செய்த உதவி..!

கவின் அடுத்த 'டாடா' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. ஏற்கனவே இயக்குனர் இளன்'

நயன்தாரா படத்தில் பெண் இசையமைப்பாளர் அறிமுகம்.. ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படத்தில் பெண் இசையமைப்பாளர் அறிமுகமாக இருப்பதை அடுத்து இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

த்ரிஷா பிறந்த நாளில் வெளியான 'தி ரோடு' மேக்கிங் வீடியோ.. மாஸ் காட்சிகள்..!

இன்று த்ரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் படங்களில் ஒன்றான 'தி ரோடு' என்ற படத்தின் மேக்கிங் வீடியோ சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.