சமந்தா குணமாக நாகசைதன்யா வீட்டில் இருந்து வந்த வாழ்த்து!

  • IndiaGlitz, [Sunday,October 30 2022]

பிரபல நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக நேற்று அறிவித்த நிலையில் அவர் விரைவில் குணமாக வேண்டும் என திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமந்தாவின் முன்னாள் கணவரான நாகசைதன்யா சமந்தாவுக்கு ஆறுதலாக நாலு வார்த்தை கூற வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த வேண்டுகோளை அடுத்து சமூக வலைதளம் மூலம் நாகசைதன்யா சமந்தா விரைவில் குணமடைய வாழ்த்து கூறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாக சைதயாவிடம் இருந்து இன்னும் வாழ்த்து வராத நிலையில் தற்போது அவரது சகோதரர்அகில் அக்கினேனி தனது சமூக வலைத்தளத்தில் சமந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அகில் அக்கினேனி தனது சமூக வலைத்தளத்தில் ‘டியர் சாம் என குறிப்பிட்டு 'நீங்கள் குணமாக உங்களுக்கு எல்லா அன்பும் வலிமையும் கிடைக்கும்’ என்று பதிவு செய்துள்ளார்.

நாக சைதனயாவுக்கு பதிலாக அவரது சகோதரர் அகில் அக்கினேனி ஆறுதல் கூறிய நிலையில் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அகில் பிறந்தநாளின் போது சமந்தா அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'அசல் இருப்பாரு, இருக்கணும்': நிவாஷினி பேச்சுக்கு கமல் கூறிய பதிலடி!

'அசல் இருப்பாரு, இருக்கணும்' என நிவாஷினி கூறியதற்கு கமல்ஹாசன் கூறிய பதிலடி குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

தனுஷின் 'வாத்தி' ரிலீஸ் தேதி ஒத்திவைப்பா? படக்குழுவினர்களின் அதிரடி பதில்!

தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படம் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முதல் சமூக வலைதளங்களில் 'வாத்தி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி

கமலிடம் கதை சொல்லி காத்திருக்கும் இளைய தலைமுறை இயக்குனர்கள்: அடுத்த சான்ஸ் யாருக்கு?

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு கதைசொல்லி இளம் இயக்குநர்கள் காத்திருக்கும் நிலையில் கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்க போவது யார் என்ற கேள்வி தற்போது ஏற்பட்டுள்ளது. 

அசீமுக்கு சரியான பதிலடி கொடுத்த ராபர்ட்.. சிரித்து கொண்டே ரசித்த கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய இரண்டாவது புரமோவில் ராபர்ட் மாஸ்டர் அசீமுக்கு சரியான பதிலடி கொடுத்த காட்சி இருப்பதை அடுத்து கமல்ஹாசன் அந்த பதிலை ரசித்து கொண்டே சிரிக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

சமந்தாவின் உடல்நிலை.. நாகசைதன்யாவுக்கு குவியும் வேண்டுகோள்!

 நடிகை சமந்தா தான் உடல்நலக் குறைவுடன் இருப்பதால் சிகிச்சை பெற்று வருவதாக தனது சமூக வலைத்தளத்தில் நேற்று தெரிவித்த நிலையில் நடிகர் நாக சைதன்யாவுக்கு ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.