நாக சைதன்யா திருமண நிச்சயதார்த்தம்.. பொன்னியின் செல்வன் நடிகை தான் மணமகள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா மற்றும் பிரபல நடிகை இடையே திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு நாகசைதன்யா மற்றும் சமந்தா திருமணம் நடந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 2021 ஆம் ஆண்டு பிரிந்தனர்.
இதனை அடுத்து நாக சைதன்யா, ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வானதி என்ற கேரக்டரில் நடித்த சோபிதா துளிபாலா என்பவருடன் டேட்டிங்கில் இருந்தார் என்று கூறப்பட்ட நிலையில் இன்று காலை இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் நாகார்ஜூனா உள்பட அவரது குடும்பத்தினர் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
இதுகுறித்து நாகார்ஜுனா தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: எங்கள் மகன் நாக சைதன்யாவுக்கும், சோபிதா துளிபாலுக்கும் இன்று காலை 9:42 மணிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!! அவரை எங்கள் குடும்பத்தில் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். மகிழ்ச்சியான ஜோடிக்கு வாழ்த்துக்கள்! அவர்கள் வாழ்நாள் முழுவதும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வாழ்த்துகிறேன். அவர்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்! என்று பதிவு செய்துள்ளார்.
இதனை அடுத்து வருங்கால தம்பதிகளாக போகும் நாக சைதன்யா - சோபியாவுக்கு தெலுங்கு திரை உலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
"We are delighted to announce the engagement of our son, Naga Chaitanya, to Sobhita Dhulipala, which took place this morning at 9:42 a.m.!!
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) August 8, 2024
We are overjoyed to welcome her into our family.
Congratulations to the happy couple!
Wishing them a lifetime of love and happiness. 💐… pic.twitter.com/buiBGa52lD
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments