திருமணத்திற்கு பின் ரீல் ஜோடியாகும் ரியல் ஜோடி

  • IndiaGlitz, [Thursday,March 08 2018]

கோலிவுட் திரையுலகில் திருமணத்திற்கு முன் ஜோடியாக நடித்த பல நட்சத்திர ஜோடிகள் திருமணத்திற்கு பின் நடிப்பது அரிதாகவே இருந்து வருகிறது. அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, பிரசன்னா-சினேகா உள்பட பலர் திருமணத்திற்கு பின் ஜோடியாக நடிக்கவில்லை

இந்த நிலையில் சமீபத்தில் திருமணம் செய்த நட்சத்திர காதல் ஜோடி நாகசைதன்யா-சமந்தா. இவர்களது திருமணம் கடந்த அக்டோபர் மாதம் வெகுசிறப்பாக நடந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் இருவரும் தனித்தனியாக நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரியல் ஜோடியான நாகசைதன்யா-சமந்தா திருமணத்திற்கு பின் மீண்டும் ரீல்ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். முழுக்க முழுக்க ரொமான்ஸ் அம்சங்கள் கொண்ட இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் ஷிவ்நிர்வானா இயக்கவுள்ளார். இதுகுறித்த தகவலை நாகசைதன்யா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்,.

More News

கமல், ரஜினியால் வெற்றிடத்தை நிரப்ப முடியுமா? கவுதமி கருத்து

இன்று உலகம் முழுவதும் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருவதை அடுத்து நடிகை கவுதமி சற்று முன்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

சிறையில் சசிகலாவுக்கு சலுகை தரச்சொன்னது யார்? டிஜிபி அதிர்ச்சி தகவல்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

பெரியார் சிலை பிரச்சனை: கருத்தில் முரண்பட்ட கமல்-ரஜினி

பெரியார் சிலை குறித்து கருத்தை பதிவு செய்த எச்.ராஜா, அதன் பின்னர் அந்த கருத்து தன்னுடைய கவனத்திற்கு வராமல் அட்மின் பதிவு செய்த கருத்து என்றும், அதற்காக தான் வருந்துவதாகவும் தெரிவித்தார்.

பெரியார் சிலை விவகாரம்: குரல் கொடுத்தார் ரஜினி

கடந்த இரண்டு நாட்களாக பெரியார் சிலை விவகாரம் குறித்து தமிழகமே பெரும் பரபரப்பில் உள்ள நிலையில் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் இந்த பிரச்சனைக்கு குரல் கொடுத்து வருகின்றன.

அம்பிகா, லிவிங்ஸ்டன் வாரிசுகள் இணையும் புதிய தமிழ்ப்படம்

நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் கதாநாயகனாக அறிமுகமாகும் 'கலாசல்' என்ற படத்தின் நாயகியாக நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா அறிமுகமாகிறார்.