குழந்தை சுர்ஜித் நிலை குறித்து உள்ளூர்க்காரர் ஒருவரின் அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Monday,October 28 2019]

நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த 2 வயது சூர்ஜித் இந்த குழந்தை, வெள்ளி மாலை ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அந்த குழந்தையை வெளியே எடுக்க மீட்புக்குழுவினர் போராடி வருகின்றனர். 

குழியில் விழுந்து 65 மணி நேரத்திற்கும் மேலாக ஆகிய நிலையில் உணவு, தண்ணீரின்றி அந்த குழந்தை எப்படி உயிர் வாழும் என்ற சந்தேகம் பலரது மனதில் எழுந்தாலும், மீட்புக் குழுவினரின் தீவிர முயற்சியின் காரணமாக குழந்தை இன்னும் உயிருடன் இருக்க வாய்ப்பிருப்பதாக லேசான நம்பிக்கையில் அனைவரும் சுர்ஜித்தின் வருகைக்காக காத்திருக்கின்றனர். 

இந்த நிலையில் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த ஒருவர் முகநூலில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் குழந்தை இறந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக ஆகிவிட்டதாகவும், மீடியா மற்றும் அதிகாரிகள் பொய் கூறி வருவதாகவும், குழந்தை மீது மண் மூடி விட்டதாகவும், வெறும் கை மட்டுமே தெரிவதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த தகவல் உண்மையாக இருக்கக்கூடாது என்று பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர். எப்படியாவது குழந்தையை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வர வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஏடிஎம் மிஷினை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்: பெரும் பரபரப்பு 

இதுவரை ஏடிஎம் மிஷினை உடைத்து அதிலுள்ள பணத்தை மட்டுமே திருடர்கள் கொள்ளையடித்து சென்ற நிலையில் தற்போது ஏடிஎம் மிஷினையே தூக்கி சென்றுள்ள சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது

ஆழ்துளைக் கிணறுகள் விவகாரம்: கமல், ரஜினி கருத்து 

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சுர்ஜித் என்ற சிறுவனை மீட்க கடந்த 36 மணி நேரமாக மீட்பு படையினர் போராடி வரும் நிலையில் இந்த குழந்தை நலமுடன் மீண்டு வரவேண்டும் என லட்சக்கணக்கானோர் பிரார்த்தனை

ஈசிஆரில் இருந்து சென்னையை நோக்கி வரும் மேகக்கூட்டங்கள்; தமிழ்நாடு வெதர்மேன்

ஈசிஆர் என்று கூறப்படும் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து சென்னைக்கு மேகக் கூட்டங்கள் நகர்ந்து வருவதால் சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன்

சுர்ஜித் மீட்பு விவகாரம்; முதல்வர், துணை முதல்வருக்கு போன் செய்த பிரதமர், லதா ரஜினி

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உள்ள நிலையில் அந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்க கடந்த இரண்டு நாட்களாக மீட்பு குழுவினர் தீவிரமாக

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்திற்கு கனமழையா?

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த வாரம் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மற்றும் கனமழை பெய்த நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மட்டும் மழை பெய்து வருகிறது