close
Choose your channels

சசிகுமார்-சமுத்திரக்கனியின் 'நாடோடிகள் 2' டெக்னீஷியன்கள் அறிவிப்பு

Thursday, January 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2009ஆம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில் "நாடோடிகள் - 2" திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்று வட்டார பகுதிகளில் விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அஞ்சலி, பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் போட்டோஷூட் நாளை நடைபெறவுள்ளது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவும், ரமேஷ் படத்தொகுப்பு பணியும், ஜாக்கி கலை இயக்குனராகவும், திலீப் சுப்புராயன் சண்டைப்பயிற்சி இயக்குனராகவும், தினேஷ் நடன இயக்குனராகவும் பணிபுரிகின்றனர். இந்த படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment