சசிகுமார்-சமுத்திரக்கனியின் 'நாடோடிகள் 2' டெக்னீஷியன்கள் அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,January 25 2018]

கடந்த 2009ஆம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில் நாடோடிகள் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்று வட்டார பகுதிகளில் விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அஞ்சலி, பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் போட்டோஷூட் நாளை நடைபெறவுள்ளது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவும், ரமேஷ் படத்தொகுப்பு பணியும், ஜாக்கி கலை இயக்குனராகவும், திலீப் சுப்புராயன் சண்டைப்பயிற்சி இயக்குனராகவும், தினேஷ் நடன இயக்குனராகவும் பணிபுரிகின்றனர். இந்த படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது

 

More News

எது கண்ட இடம்? கமல்ஹாசனுக்கு சீமான் கேள்வி

தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் தியானம் செய்தது குறித்து கமல் இன்று கூறியபோது, 'இதற்குத்தான் கண்ட இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்க வேண்டாம் என்று கூறினேன்.

கைதிகளுக்கும் மனைவியுடன் உறவு கொள்ள உரிமை: ஆயுள் கைதிக்கு 2 வாரம் விடுமுறை அளித்த நீதிமன்றம்

கைதிகள் என்று முத்திரை குத்தப்பட்டாலும் அவர்களும் மனிதர்களே! சிறைக்கு செல்பவர்கள் திருந்தி நல்ல மனிதர்களாக வெளியேற வேண்டும் என்பதே சிறைகள் அமைக்கப்பட்டதன் நோக்கம்.

20 வருடங்களுக்கு பின் மோகன்லாலுடன் இணையும் பிரபல தமிழ் நடிகர்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து வரும் 'ஒடியன்' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்காக 15 கிலோ எடையை குறைத்து இளமையாக காட்சி தரும் மோகன்லால், பல்வேறு கெட்டப்புகளில் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ரஜினியுடன் கூட்டணி: சமிக்ஞை காட்டிய கமல்

கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் அரசியலுக்கு தனித்தனி கட்சிகள் ஆரம்பித்து வரவுள்ளனர். இருவருக்கும் இடையில் அடிப்படையிலேயே வேற்றுமை இருப்பதால் தனித்தனியாக கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நான் எம்.எல்.ஏ-க்களை விட அதிகமாக சம்பாதிப்பவன்: விஷால்

சமீபத்தில் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷாலும் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருடைய மனு முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்னர் நிராகரிக்கப்பட்டது.