'நாடோடிகள் 2' படம் ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சசிகுமார், அஞ்சலி நடிப்பில் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகிய ’நாடோடிகள் 2’ என்ற திரைப்படம் நேற்று வெளியாக இருந்த நிலையில் திடீரென இந்த படத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உரிமை வழங்கும் ஒப்பந்தத்தை மீறிய வழக்கு ஒன்றில் இந்த படத்திற்கு இடைக்கால தடை விதிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இன்று இந்த படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகவில்லை. எனவே சசிகுமார், சமுத்திரக்கனி ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனையடுத்து இந்த படத்தை ரிலீஸ் செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.
இந்த நிலையில் சற்றுமுன்னர் இயக்குனர் சமுத்திரக்கனி தனது சமூக வலைத்தளத்தில் நாடோடிகள் 2’ திரைப்படம் இன்று இரவுக்காட்சி முதல் திரையிடப்படும் என அறிவித்துள்ளார். சமுத்திரக்கனி, அஞ்சலி, அதுல்யா ரவி, பரணி, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
VELVOM... pic.twitter.com/DiwuKkXT3i
— P.samuthirakani (@thondankani) January 31, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com