close
Choose your channels

'நாடோடிகள் 2' ரிலீஸ் தேதி குறித்த தகவல்

Tuesday, February 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சசிகுமார் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கி வந்த 'நாடோடிகள் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் வரும் மார்ச் 1ஆம் தேதி வெளியாகவிருப்பதாகவும் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான 'நாடோடிகள்' படத்தின் இரண்டாம் பாகமான இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அதுல்யா ரவி, பிக்பாஸ் புகழ் பரணி, நமோ நாராயணா, ஞானம்பந்தம், சூப்பர் சுப்பராயன், எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில், ஏகாம்பரம் ஒளிப்பதிவில் கோபிகிருஷ்ணா படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படம் ரிலீஸ் ஆகும் அதே மார்ச் 1ஆம் தேதிதான் அருண்விஜய்யின் 'தடம்' திரைப்படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment