80களின் நெருங்கிய தோழியை சந்தித்த நதியா: வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை நதியா கடந்த 1985ஆம் ஆண்டு பாசில் இயக்கிய ’பூவே பூச்சூடவா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இந்த படத்தில் நாட்டிய பேரொளி பத்மினி அவரது பாட்டியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து ரஜினிகாந்த், சத்யராஜ், பிரபு, மோகன், சிவகுமார், விஜயகாந்த், சுரேஷ் உள்பட பல பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்தார் என்பதும் அவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திருமணத்திற்குப் பின் நீண்ட இடைவெளிக்குப் பின் ஜெயம் ரவியின் ’எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ என்ற படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆகிய நதியா தற்போது வரை நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை நதியா தனது சமூக வலைத்தளத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் தனது நெருங்கிய தோழியான குஷ்புவை மும்பையில் சந்தித்ததாகவும் இந்த சந்திப்பு தனக்கு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் குஷ்பு மற்றும் பூனம் தில்லான் ஆகியோர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Good times with my 80's Bonding Friends ♥️ @khushsundar @poonamdhillon pic.twitter.com/Ik51ncJILX
— Actress Nadiya (@ActressNadiya) January 19, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments