'சர்தார் 2' படத்தில் இணையும் நடிப்பு அரக்கன்.. வேற லெவலில் எதிர்பார்ப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்தி நடித்த ’சர்தார்’ திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது நடிப்பு அரக்கன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா உள்ளிட்டோர் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான ’சர்தார்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியது என்பதை பார்த்தோம்.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ரத்னகுமார் திரைக்கதை எழுதும் குழுவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யா இந்த படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனேகமாக இந்த படத்தில் அவர் வில்லன் இடத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் சில பிரபலங்கள் ’சர்தார் 2’ படத்தில் இணைய இருப்பதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், ஜார்ஜ் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில், திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
Delighted to welcome @iam_sjsuryah sir for #Sardar2. Shoot in progress, in full swing.@Karthi_Offl @Psmithran @Prince_Pictures @lakku76 @venkatavmedia @thisisysr @george_dop @rajeevan69 @dhilipaction @editorvijay @paalpandicinema @prosathish @UrsVamsiShekar @SonyMusicSouth… pic.twitter.com/c4UXfkEAwH
— Prince Pictures (@Prince_Pictures) July 16, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com