பத்ம விபூஷன் விருது பெற்ற ரஜினிக்கு நடிகர் சங்கம் பாராட்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று முன்தினம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இந்திய அரசின் மிக உயரந்த விருதுகளில் ஒன்றான 'பத்ம விபூஷன்' விருது அளிக்கப்பட்டது. இந்த விருது ரஜினிக்கு அளிக்கப்பட்ட செய்தி வெளிவந்ததும் திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு, குஷ்பு உள்பட பலர் அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் சங்கமும் ரஜினிக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
'பல வருட உழைப்பு கடின முயற்சிக்கு பிறகு தினம் தினம் செய்திகளாக மாறி நிற்கும் அளவிற்கு வளர்ந்துவிட்ட ரஜினிகாந்துக்கு மக்கள் தந்த வெற்றியும் விருதுகளுமே அங்கீகாரமாகும். இது வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு மட்டுமல்ல வளர்ந்து நிற்கும் கலைஞர்களுக்கும் பொருந்தும்.
அதோடு திரை உலக பாராட்டுக்களையும் விருதுகளையும் தாண்டி சமூக அங்கீகாரம் கிடைக்கும்போதுதான், அந்த கலைஞன் உச்சம் பெறுகிறார். அந்த வகையில் உலக தமிழர்களும் இந்தியர்களும் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் கலைஞராக உள்ள ரஜினிகாந்த், இந்திய அரசின் உயரிய 'பத்ம விபூஷன்' விருதை பெறுவதில் தென்னிந்திய நடிகர் சங்கம் பெருமிதம் கொள்கிறது. காலம் தன்னிடம் உள்ள அருட்கொடைகள் அனைத்தையும் கொடுத்து அவரை ஆசிர்வதிக்கட்டும்.
இவ்வாறு நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com