நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு மேலும் ஒரு சலுகை
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றதில் இருந்து நலிந்த நடிகர்கள் உள்பட பல்வேறு நடிகர் நடிகைகள் பயன்பெற்று வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு நல்ல விஷயம் நடைபெறவுள்ளது.
நடிகர் நடிகைகளின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இலவச மெடிக்கல் கார்டு வழங்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து நடிகர், நடிகைகளும் பங்குபெற்று தங்கள் மெடிக்கல் கார்டை பெற்றுக்கொள்ளும்படி நடிகர் சங்க நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவதூ; நடிகர் சங்க நிர்வாகிகள் ஏற்கனவே எஸ்.ஆர்.எம் மருத்துவமனை மற்றும் ஏ.சி.எஸ். மருத்துவமனை ஆகிய நிறுவனங்களின் நிர்வாகிகளிடம் நடிகர்களுக்கான மருத்துவ உதவிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக ஏசிஎஸ் மருத்துவ பல்கலைக்கழகம் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவ உதவிகள் வழங்கிட ஒப்புக்கொண்டுள்ளது. அதனுடைய இலவச அட்டை உறுப்பினர்களுக்கு வழங்கும் விழா நாளை மாலை 4 மணிக்கு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள 'நாரதகான சபா'வில் நடைபெறுகிறது. இந்த நிகழ்சியில் நடிகர் நடிகைகளும் திரைத்துறையை சேர்ந்த மூத்த கலைஞர்களும் கலந்து கொள்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments