நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு மேலும் ஒரு சலுகை

  • IndiaGlitz, [Sunday,March 13 2016]

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றதில் இருந்து நலிந்த நடிகர்கள் உள்பட பல்வேறு நடிகர் நடிகைகள் பயன்பெற்று வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு நல்ல விஷயம் நடைபெறவுள்ளது.

நடிகர் நடிகைகளின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இலவச மெடிக்கல் கார்டு வழங்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து நடிகர், நடிகைகளும் பங்குபெற்று தங்கள் மெடிக்கல் கார்டை பெற்றுக்கொள்ளும்படி நடிகர் சங்க நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவதூ; நடிகர் சங்க நிர்வாகிகள் ஏற்கனவே எஸ்.ஆர்.எம் மருத்துவமனை மற்றும் ஏ.சி.எஸ். மருத்துவமனை ஆகிய நிறுவனங்களின் நிர்வாகிகளிடம் நடிகர்களுக்கான மருத்துவ உதவிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக ஏசிஎஸ் மருத்துவ பல்கலைக்கழகம் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவ உதவிகள் வழங்கிட ஒப்புக்கொண்டுள்ளது. அதனுடைய இலவச அட்டை உறுப்பினர்களுக்கு வழங்கும் விழா நாளை மாலை 4 மணிக்கு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள 'நாரதகான சபா'வில் நடைபெறுகிறது. இந்த நிகழ்சியில் நடிகர் நடிகைகளும் திரைத்துறையை சேர்ந்த மூத்த கலைஞர்களும் கலந்து கொள்கின்றனர்.

More News

மோகன் ராஜாவுடன் மீண்டும் இணைந்த இசையமைப்பாளர்

ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு அழுத்தமான திரைக்கதை...

'தெறி' படத்தின் தெரியாத தகவல்

இளையதளபதி விஜய் பாடிய 'தெறி' படத்தின் ஜித்து ஜில்லாடி பாடலின் நான்கு வரிகளை சமீபத்தில் வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்திய...

'தெறி'யின் ராப் பாடல் வரிகள்

இளையதளபதி விஜய் பாடிய 'தெறி' படத்தின் ஜித்து ஜில்லாடி பாடலின் நான்கு வரிகளை சமீபத்தில் வெளியிட்டு விஜய் ரசிகர்களை

Music director of Sivakarthikeyan - Mohan Raja film

As we all know director Mohan Raja after delivering the unanimously acclaimed super hit 'Thani Oruvan' will direct fast raising star Sivakarthikeyan in his next film...

விஜயகாந்த் பாணியை பின்பற்றும் 'கோ 2' படக்குழு

தேமுதிக என்ற கட்சியை நடத்தி வரும் கேப்டன் விஜயகாந்த் வரும் தேர்தலில் தனித்து போட்டி என்ற பரபரப்பான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார்...