சிறந்த திரைப்படத்திற்கு ரூ.3 லட்சம். நடிகர் சங்கம் அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,January 06 2017]

14வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று சிறப்பாக தொடங்கியது. வரும் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இதன் தொடக்கவிழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, பாக்யராஜ், நடிகர் சங்க நிர்வாகிகள் விஷால், கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் 65 நாடுகளை சேர்ந்த 165 சிறந்த படங்கள் சென்னை காசினோ திரையரங்கில் திரையிடப்பட்டு வருகின்றன. இந்த விழாவின் இறுதியில் சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்

இந்நிலையில் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றி பெறும் திரைப்படத்திற்கு ரூ.3 லட்சம் நடிகர் சங்கம் சார்பில் பரிசு வழங்கப்படும் என நடிகர் சங்க நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த திரைப்பட விழாவில் '24, அம்மா கணக்கு, தேவி, தர்மதுரை, இறைவி, ஜோக்கர், கர்மா, நானும் ரௌடி தான், பசங்க-2, ரூபாய், சில சமயங்களில், உறியடி' ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றனர். மேலும் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் அவர் நடித்த 'அடிமைப்பெண்' மற்றும் 'ஆயிரத்தில் ஒருவன்' படங்களும் திரையிடப்படுகின்றன

More News

மு.க.ஸ்டாலின் திடீர் பதவி விலகல்

நேற்று முன் தினம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடிய திமுக பொதுக்குழுவில் திமுகவின் செயல் தலைவராக புதிய பொறுப்பினை மு.க.ஸ்டாலின் ஏற்று கொண்டார்...

விஜய் ரசிகர்களுக்கு கிடைத்த சர்ப்ரைஸ் போனஸ்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது...

பாலிவுட் நடிகர் ஓம்புரி மறைவிற்கு பிரதமர், கமல்ஹாசன் இரங்கல்

பிரபல பாலிவுட் நடிகர் ஓம்புரி இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். பிறந்த நாள் சிறப்பு பதிவு

ஆஸ்கார் பரிசு என்பது இந்திய திரையுலகினர்களுக்கு எட்டாக்கனியாக பல ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில் ஒரே ஆண்டில் ஒன்றில்லை இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்று 100 கோடி இந்தியர்கள் மனதிலும் ஒரே நிமிடத்தில் இடம் பெற்றவர் நமது ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான். இவரது இசையில் மயங்காத இந்திய இளைஞர்கள் இருக்க முடியாது.

ஃபர்ஸ்ட்லுக் வரும் முன்னே வியாபாரத்தை தொடங்கிய சூர்யா படம்

பிரபல நிறுவனம் ஒன்று 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் தமிழக உரிமையை பெற மிகப்பெரிய தொகை தர முன்வந்துள்ளதாகவும் இதுகுறித்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது...