சிறந்த திரைப்படத்திற்கு ரூ.3 லட்சம். நடிகர் சங்கம் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
14வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று சிறப்பாக தொடங்கியது. வரும் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இதன் தொடக்கவிழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, பாக்யராஜ், நடிகர் சங்க நிர்வாகிகள் விஷால், கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் 65 நாடுகளை சேர்ந்த 165 சிறந்த படங்கள் சென்னை காசினோ திரையரங்கில் திரையிடப்பட்டு வருகின்றன. இந்த விழாவின் இறுதியில் சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்
இந்நிலையில் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றி பெறும் திரைப்படத்திற்கு ரூ.3 லட்சம் நடிகர் சங்கம் சார்பில் பரிசு வழங்கப்படும் என நடிகர் சங்க நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த திரைப்பட விழாவில் '24, அம்மா கணக்கு, தேவி, தர்மதுரை, இறைவி, ஜோக்கர், கர்மா, நானும் ரௌடி தான், பசங்க-2, ரூபாய், சில சமயங்களில், உறியடி' ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றனர். மேலும் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் அவர் நடித்த 'அடிமைப்பெண்' மற்றும் 'ஆயிரத்தில் ஒருவன்' படங்களும் திரையிடப்படுகின்றன
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com