நம்மை விட்டு சென்றது ஒரு தனி மனிதர் அல்ல. ஒரு சகாப்தம். ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்கம் இரங்கல்
- IndiaGlitz, [Wednesday,December 07 2016]
முன்னாள் தமிழக முதல்வரும், தமிழக மக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவருமான செல்வி ஜெயலலிதாவின் மறைவு பொதுமக்களுக்கு எந்த அளவுக்கு இழப்போ அதேபோல் திரையுலகினர்களுக்கும் பெருத்த இழப்பு. இன்னொருவர் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல புகழ் பெறுவாரா? என்பது கேள்விக்குறியே. இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் இதோ:
நம்மை விட்டு சென்றது ஒரு தனி மனிதர் அல்ல சகாப்தம் முடிந்திருக்கிறது. ஒரு சரித்திரம் முடிந்திருக்கிறது. ஒரு நடனமணியாக , ஒரு நடிகராக , ஒரு கட்சியின் தலைவராக , அரசின் தலைமையாக அவர் கால் வைத்த எல்லா துறைகளிலும் உட்சாணியை தொட்டு இருக்கிறார்.
பல்லாண்டு காலம் அடிமைபட்டிருந்த பெண் இனத்தில் ஒரு பெண் நினைத்தால் , தைரியத்துடன் முன் சென்றால் எந்த அளவிற்கு செல்லலாம் என்பதற்கு முன் உதாரணமாக இருக்கிறார். எங்கள் நடிகர் சமூகத்திற்கு ஒரு மரகத மணி போல் அவர் ஒலித்து கொண்டு இருக்கிறார். எங்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினராக இருந்திருக்கிறார் , எங்கள் சங்கத்தின் பால் ,மிக அக்கறை கொண்டு இருந்திருக்கிறார்.
அவருடைய சக்தி , அவருடைய செயல் எங்களை முன்னெடுத்து செல்லும். இந்த தருணத்தில் அவரை பிரிந்து வாடும் அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நடிகர் சமூகத்தின் சார்பாகவும் , எங்கள் திரையுலகத்தின் சார்பாகவும் எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். என்றென்றும் அவர்கள் நினைவோடு , அவர்கள் செயல்பாட்டில் நடிகர் சங்கம்
இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.