நடிகர் சங்க தேர்தல்: வெளியூர் உறுப்பினர்களுக்கு தபால் ஓட்டு வசதி.
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி பத்மனாபன் அவர்களில் முன்னிலையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சரத்குமார் மற்றும் விஷால் அணியினர் வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும், தேர்தல் பிரச்சாரம் செய்வதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வரும் அக்டோபர் 8ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையர் ஈ.பத்மநாபன் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த தேர்தலில் சென்னை நகர எல்லைக்கு அப்பால் வசிக்கும் வாக்காளர்களும் வாக்களிக்கும் வகையில் வாக்குரிமை பெற்ற அனைத்து வெளியூர் உறுப்பினர்களின் முகவரிக்கு அக்டோபர் 9-ம் தேதி தபாலில் வாக்குச்சீட்டு அனுப்பப்படும் என்றும் பத்மனாபன் கூறியுள்ளார்.
இவ்வாறு தபாலில் அனுப்பப்படும் வாக்குச் சீட்டுகள் அக்டோபர் 17-ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து சேர வேண்டும் என்றும் சென்னைக்கு அப்பால் வசிக்கும் வாக்களிக்கும் உரிமை பெற்ற உறுப்பினர்கள் நேரில் வந்து வாக்களிக்க கோரும் விண்ணப்பம் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு வந்து சேர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் அனுமதி கொடுக்கப்பட்டவர்கள் தங்கள் உறுப்பினர் அடையாள அட்டையை தவறாமல் கையுடன் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நடிகர் சங்க உறுப்பினர்கள் தங்களுடைய முகவரி மாற்றம் பற்றிய தகவல்களை தேர்தல் ஆணையர் அலுவலகத்துக்கு வரும் 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments