'மரணம் கண்டு பயப்படுகிறீர்களா? நடிகர் திலகம் சிவாஜியின் சிறப்பான பதில்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மரணத்தை கண்டு பயப்படுகிறீர்களா? என்ற கேள்விக்கு அவர் அளித்த சிறப்பான பதில் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரை உலகிற்கு மட்டுமின்றி இந்திய திரையுலகில் உள்ள தற்போதைய நடிகர்களுக்கு குருவாக விளங்கி வருபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்பதும் அவர் நடிக்காத வேடமில்லை, பெறாத விருதுகள் இல்லை, பார்க்காத வெற்றிகள் இல்லை என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் அவர் ஆங்கில ஊடகத்திற்கு ஆங்கிலத்தில் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. இந்த பேட்டியில் நீங்கள் மரணத்தை கண்டு பயப்படுகிறீர்களா? என்று கேட்டதற்கு 'இல்லை, நான் ஏன் மரணத்தை கண்டு பயப்பட வேண்டும்? நாங்கள் சோழர் பரம்பரை சேர்ந்தவர்கள்’ என்று கம்பீரமாக கூறினார். கடந்த சில ஆண்டுகளாக எனக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது என்பது உண்மைதான், எனது இதயத்தில் சில பிரச்சனைகள் உள்ளது என்று கூறிய சிவாஜி கணேசன் இது கடுமையான உழைப்பு மற்றும் அதிக சத்தத்துடன் வசனங்கள் பேசியதன் காரணமாக வந்தது, ஆனால் நான் எப்போதுமே மரணத்தை கண்டு பயந்ததில்லை என்றும் அவர் தெரிவித்தார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் நான் மூன்று ஷிப்டுகள் வேலை பார்த்தேன் என்றும் அது என்னுடைய விருப்பத்தின் பேரில் தான் வேலை பார்த்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் தான் ஒரு தோல்வி அடைந்த அரசியல்வாதி என்றும் அரசியலில் நான் நினைத்தது எதுவும் நடக்கவில்லை என்றும் தெரிவித்தார். ஆரம்ப காலத்தில் திமுகவில் இருந்ததாக தெரிவித்த சிவாஜி கணேசன் அதன் பின் காமராஜரின் மீது கொண்ட அன்பு காரணமாக காங்கிரஸில் இணைந்தேன், காங்கிரஸ் கட்சி எனக்கு ராஜ்யசபா எம்பி பதவி கொடுத்து அங்கீகாரம் கொடுத்தது என்றும் தெரிவித்தார். ஆனால் அதே நேரத்தில் இந்திராகாந்தியின் மறைவிற்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கும் எனக்கும் இருந்த உறவில் விரிசல் ஏற்பட்டது என்றும் அதன் பின் நான் கட்சியில் இருந்து வெளியேறினேன் என்றும் தெரிவித்தார். நான் தோல்வி அடைந்த அரசியல்வாதியாக இருந்தாலும், அரசியலில் ஈடுபடாததால் நான் தற்போது எனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுகிறேன் என்றும், எனது மனைவி, குழந்தைகள், பேரக்குழந்தைகள், கொள்ளு பேர குழந்தைகளுடன் நான் அதிக நேரம் செலவிடுகிறேன் என்றும் இதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார்.
மேலும் நான் இந்தியன் என்பதில் மிகவும் பெருமையுடன் கூறிக் கொள்வேன் என்றும் நான் கனடா மேயராக சில நாட்கள் இருந்த போதிலும் எனக்கு இந்தியன் என்று கூறுவதில் தான் பெருமை என்றும் இந்தியன் என்பதை ஒரு நாளும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றும் கேள்வி ஒன்றுக்கு அவர் பதில் அளித்துள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
\#sivajiganesan #cinema 👌👍👏💥💥💥📽💯🔥 pic.twitter.com/FbzDnFRPy5
— SundarBala (@PROSundarbala) March 1, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com