ரஜினிக்கு நாசர் எழுதிய வாழ்த்து கடிதம்

  • IndiaGlitz, [Friday,April 15 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் டெல்லி சென்று இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களிடம் இருந்து இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாகிய 'பத்ம விபூஷன்' விருதினை பெற்றார் என்பதை பார்த்தோம். இந்நிலையில் நடிகர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் நாசர் அவர்கள் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.


நாசர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தங்களுக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டது குறித்து நாங்கள் பெருமிதத்துடன் மகிழ்வு கொள்கிறோம், தாங்கள் மென்மேலும் விருதுகளும் பெருமைகளும் பெறவேண்டுமென மனதார வாழ்த்துகிறோம் என்று எழுதியுள்ளார்.

மேலும் நாசர் எழுதிய மற்றொரு கடிதத்தில் 'தாங்கள் ஏப்ரல் 17 ஆம் தேதி நடக்கவிருக்கும் நட்சத்திர கிரிக்கெட் விழாவில் கலந்துகொள்ள இசைந்ததற்கு மிக்க நன்றி. காலை பத்துமணிக்கு தொடங்க இருக்கும் விழாவை தாங்களும் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களும் துவங்கிவைக்க வேண்டுமாய் பணிவோடு கேட்டுக்கொள்கிறோம். மாலை ஏழு மணிக்கு பத்மவிபூசன் விருது பெற்றமைக்காக மக்களரங்கில் பாராட்டும் தெரிவிக்க ஆசைப்படுகிறோம். தங்கள் வருகையை பேராவலோடு எதிர்பார்க்கிறோம்' என்றும் நாசர் குறிப்பிட்டுள்ளார்.

More News

கவுண்டமணி படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த 1990கள், மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் நம்பர் ஒன் காமெடி நடிகராக கோலிவுட்டில் வலம் வந்த நடிகர் கவுண்டமணி இடையில்...

சென்னையில் 'ஐ' சாதனையை முறியடித்தது விஜய்யின் 'தெறி'

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் நேற்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றுள்ள நிலையில்...

நடிகர் சங்கத்துடன் மீண்டும் இணையும் கமல்-ஸ்ருதி

'தூங்காவனம்' படத்தை அடுத்து உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் தொடக்கவிழா ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது...

விஷாலின் 'மதகஜராஜா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

கொம்பன்' இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விஷால் நடித்து முடித்துள்ள 'மருது' திரைப்படம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள

பிரசாந்த் நடிக்கும் அடுத்த பட டைட்டில் இதுதான்....

ஒரு காலத்தில் அஜித், விஜய்க்கு நிகரான ஹீரோவாக கோலிவுட்டில் வலம் வந்த நடிகர் பிரசாந்த் இடையில் ஏற்பட்ட ஒருசில பிரச்சனைகள் காரணமாக சினிமாவில் இருந்து...