டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் விஜயகுமாருக்கு நடிகர் சங்கம் வாழ்த்து

  • IndiaGlitz, [Wednesday,March 15 2017]

பிரபல நடிகர் விஜயகுமார் கடந்த 1961ஆம் ஆண்டு முதல் ஒருசில படங்களில் நடித்து வந்தாலும், 1973ஆம் ஆண்டு சிவகுமார் நடித்த 'பொண்ணுக்கு தங்க மனசு' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதன்பின்னர் படிப்படியாக முன்னேறி ஹீரோ, வில்லன், குணசித்திர கேரக்டர் என இவர் ஏற்காத கேரக்டரே இல்லை என்ற அளவுக்கு நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக விஜயகுமார் செய்த கலைச்சேவையை பாராட்டி சென்னை எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளிக்கவுள்ளது. டாக்டர் பட்டம் பெற்ற விஜயகுமாருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நடிகரும் எங்களது மூத்த சகோதரருமான விஜயகுமார் பொண்ணுக்கு தங்கமனசு' என்ற படத்தின் முலமாக கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமாகி கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக கலைச் சேவையாற்றி வருகிறார். தொடர்ந்து அக்னி நடசத்திரம்', கிழக்கு சீமையிலே', நாட்டாமை' போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் மிகபெரிய ஆளுமையை செலுத்தி பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தன் நடிப்பை தொடர்கிறார்.
அவரது கலை பயணத்தை கௌரவிக்கும் விதமாக எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைகழகம் அவருக்கு வருகிற ஏப்ரல் 18-ஆம் தேதி டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவிப்பதை அறிந்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அவரது கலைபயனத்திற்க்கு தலைவணங்கி தென்னிந்திய நடிகர் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
இவ்வாறு அந்த வாழ்த்து அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

அஜித் இயக்குனரை 'ஏமாளி' ஆக்கிய சமுத்திரக்கனி

கடந்த 1999ஆம் ஆண்டு அஜித், ஜோதிகா நடித்த 'முகவரி' படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.

டிடிவி தினகரனை எதிர்க்கும் திமுக வேட்பாளர் இவர்தான்

ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியான ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரமாக உள்ளன. சற்று முன்னர் இந்த தொகுதியின் அதிமுக சசிகலா அணியின் வேட்பாளராக டிடிவி தினகரன் அறிவிக்கப்பட்டார்...

ரஜினியை அடிக்க தயங்கினேன். ஆனந்தராஜின் அதிர்ச்சி அனுபவம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா' திரைப்படம் 22 வருடங்களுக்கு பின்னர் சமீபத்தில் டிஜிட்டலில் ரிலீஸ் ஆனபோது புதிய ரிலீஸ் படங்களுக்கு இணையான வரவேற்பை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் மறக்க முடியாத இரண்டு காட்சிகள், தங்கைக்கு மெடிக்கல் காலேஜ் சீட் வாங்குவது, மற்றும் 'உள்ளே போ' என ரஜினி ஆக்ரோஷமாக கூறும் காĩ

ஆர்.கே.நகர் அதிமுக சசிகலா அணி வேட்பாளர் அறிவிப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியாக இருக்கும் ஆர்.கே. நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

'பாகுபலி 2' டிரைலர் ரன்னிங் டைம்

இந்தியாவின் பிரமாண்டமான திரைப்படமான 'பாகுபலி 2' திரைப்படத்தினை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் மார்ச் 16ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த டிரைலர் தற்போது சென்சார் செய்யப்பட்டு&#