சரத்குமார், ராதாரவி மீது நடிகர் சங்கம் புதிய குற்றச்சாட்டு

  • IndiaGlitz, [Saturday,November 12 2016]

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் ஒன்று முன்னாள் நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் மற்றும் முன்னாள் செயலாளர் ராதாரவி ஆகியோர் மீது நில அபகரிப்பு குறித்து காவல்துறையிடம் புகார் செய்வது என்ற தீர்மானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புறநகர் பகுதியான கூடுவாஞ்சேரி அருகில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக சரத்குமார் மற்றும் ராதாரவி விற்பனை செய்ததாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையிடம் புகார் அளிக்கவும் நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.
பொதுக்குழுவில் இயற்றப்படும் இன்னும் சில தீர்மானங்கள் குறித்து விரைவில் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விவேக்கை நெகிழ்ச்சி அடைய செய்த ஏழை வாலிபர்

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் தனது மகளுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உடற்பயிற்சி செய்ய சென்றுள்ளார்...

சூர்யாவின் 'சிங்கம் 3' படத்தின் பிரிட்டன் வியாபாரம் குறித்த தகவல்

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'சிங்கம் 3' என்ற 'எஸ் 3' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து மிகக்குறுகிய காலத்தில் 5 மில்லியன்...

கார்த்தியின் 'காற்று வெளியிடை' ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்

கார்த்தி நடித்த 'காஷ்மோரா' திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்து வரும் அடுத்த படமான 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது.

அச்சம் என்பது மடமையடா' படத்திற்கு கிடைத்த இனிப்பான செய்தி

சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் நேற்று வெளியாகி சிம்பு ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களளயும் கவர்ந்துள்ளது

'அச்சம் என்பது மடமையடா' முதல் நாள் வசூலில் சாதனை

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.