தமிழக அரசுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு தமிழகத்தின் ஆளும் அரசே காரணம் என்று விஷால் தரப்பினர்களும், எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வரும் நிலையில் தமிழக அரசுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
பொன்மனச் செம்மலென்றும் மக்கள் திலகமென்றும், புரட்சி தலைவர் என்றும் வள்ளல் என்றும் வல்லவன் என்றும் தமிழக மக்களின் மனதிலும், வரலாற்றிலும் ஆழமாய் பதிந்த பெயர் எம்.ஜி.ஆர். வருடங்கள் ஆயிரம் கடந்தாலும் அன்றலர்ந்த மலர் போல அவர்தம் புகழ் ஜொலிக்கும்!
திரைப்படமாகட்டும், அரசியலாகட்டும், தொட்டதுறையெல்லாம் பொன்னாக்கிய மக்கள் மன்னன்.
எட்டாத இலக்கென்றாலும், எல்லா நடிகர்களுக்கும் கனவு நாயகன். தான் நலம் பெற்றது போல், தம் கலை சார்ந்த மற்றவர் வாழ்வும் உயரவேண்டுமென தென்னிந்திய நடிகர் சங்கத்தை உருவாக்கி பலம் பெற செய்தவர். அண்ணலவர் செய்த காரியம் இன்று பல்லாயிரம் கலைக் குடும்பந்தனில் ஒளி விளக்காய் மின்னுகிறது. அவர்தம் பூதவுடல் இயற்கையோடு கலந்து, கரைந்தாலும் அவர் செயல்களும் தர்மங்களும் காலம் கடந்து நிற்கும்.
அன்னாரது நூற்றாண்டு விழாவினை தமிழகமெங்கும் கொண்டாடு ம்தமிழக அரசிற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிரந்தாழ்ந்த நன்றிகள் கோடி.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments