சொந்த வீட்டில் துக்கம் நிகழ்ந்த போதிலும்... முதல்வருக்கு நன்றி தெரிவித்த நடிகர் சங்கம்..!

  • IndiaGlitz, [Tuesday,February 14 2023]

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் சொந்த வீட்டில் துக்கம் நிகழ்ந்த போதிலும் அன்றைய தினம் மறைந்த இயக்குனர் டிபி கஜேந்திரன் மற்றும் மறைந்த பாடகி வாணி ஜெயராம் ஆகியோர்களின் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதற்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பேரன்பிற்கும்‌, பெரும்‌ மரியாதைக்கும்‌ உரிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர்‌ அவர்களுக்கு, வணக்கம்‌. தென்னிந்திய நடிகர்‌ சங்கத்தின்‌ 1202.2023 அன்று செயற்குழுவில்‌ நிறைவேற்றப்பட்ட நன்றி தீர்மானத்தின்‌ சாராம்சம்‌.

19 மொழிகளில்‌ 10 ஆயிரத்துக்கும்‌ மேற்பட்ட பாடல்களை பாடி நம்‌ தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்தவர்‌ பாடகி வாணி ஜெயராம்‌. 3 தேசிய விருதுகள்‌, நாட்டிலேயே உயரிய விருதான பத்ம பூஷண்‌ விருது என நீங்கா புகழுடன்‌ வாழ்ந்தவர்‌. கடந்த வாரம்‌ மறைந்த அவரது உடலுக்கு அரசு சார்பில்‌ 30 குண்டுகள்‌ முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ உயர்திரு மு.க.ஸ்டாலின்‌ அவர்களுக்கு தென்னிந்திய திரையுலகம்‌ சார்பில்‌ தென்னிந்திய நடிகர்‌ சங்கம்‌ தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.

மேலும்‌ அன்றைய தினம்‌ சொந்த விட்டிலேயே ஒரு துக்கம்‌ இருந்த போதிலும்‌ மறைந்த மூத்த நடிகரும்‌ இயக்குனருமான டிபி.கஜேந்திரன்‌, பாடகி வாணி ஜெயராம்‌ இருவரின்‌ உடல்களுக்கும்‌ நேரில்‌ சென்று அஞ்சலி செலுத்தியதற்கும்‌ இச்சங்கம்‌ நன்றியினை தெரிவித்துக்‌ கொள்கிறது.

எங்கள்‌ சங்கத்தில்‌ நிறைவேற்றப்பட்ட நன்றி தீர்மானத்தை தங்களுக்கு சமர்ப்பித்து திரையுலகத்திற்கு தங்களின்‌ சேவை மேன்மேலும்‌ சிறக்க வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்‌.
 

More News

காதலர் தினத்தில் பூட்டு போட்டு சாவியை ஆற்றில் தூக்கி போட்ட தமிழ் நடிகை: வைரல் வீடியோ..!

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காதலர்களும், காதலர்களாக இருந்தவர்களும் இன்றைய தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

பிரபல நடிகருக்கு காதலர் தினத்தில் ரோஸ் கொடுத்த அதிதி.. சித்தார்த் ரியாக்சன்..!

உலகம் முழுவதும் இன்று காதலர்கள் காதலர் தினத்தை கொண்டாடி வரும் நிலையில் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி காதலிப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் அவர்கள் தங்கள் காதலை

'அயலி' பட இயக்குனருக்கு அமைச்சர் உதயநிதி அளித்த மறக்க முடியாத பரிசு..!

 சமீபத்தில் வெளியான 'அயலி' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மறக்க முடியாத நினைவு பரிசு ஒன்றை வழங்கி உள்ளார்.

அடுத்த சிவகார்த்திகேயன் கவின் தான்: 'டாடா' தயாரிப்பாளர்..!

'டாடா' படத்தின் வெற்றி விழாவில் பேசிய தயாரிப்பாளர் அம்பேத்குமார், 'சிவகார்த்திகேயன் போல் கவின் நிச்சயமாக வருவார்' என கூறியுள்ளார். 

இது 15 வருட ஒற்றுமை.. இன்னும் தொடரும்: சினேகாவின் காதலர் தின க்யூட் புகைப்படங்கள்..!

 உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்றான பிரசன்னா மற்றும் சினேகா ஜோடி