சொந்த வீட்டில் துக்கம் நிகழ்ந்த போதிலும்... முதல்வருக்கு நன்றி தெரிவித்த நடிகர் சங்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் சொந்த வீட்டில் துக்கம் நிகழ்ந்த போதிலும் அன்றைய தினம் மறைந்த இயக்குனர் டிபி கஜேந்திரன் மற்றும் மறைந்த பாடகி வாணி ஜெயராம் ஆகியோர்களின் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதற்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பேரன்பிற்கும், பெரும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 1202.2023 அன்று செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட நன்றி தீர்மானத்தின் சாராம்சம்.
19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி நம் தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்தவர் பாடகி வாணி ஜெயராம். 3 தேசிய விருதுகள், நாட்டிலேயே உயரிய விருதான பத்ம பூஷண் விருது என நீங்கா புகழுடன் வாழ்ந்தவர். கடந்த வாரம் மறைந்த அவரது உடலுக்கு அரசு சார்பில் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உயர்திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தென்னிந்திய திரையுலகம் சார்பில் தென்னிந்திய நடிகர் சங்கம் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.
மேலும் அன்றைய தினம் சொந்த விட்டிலேயே ஒரு துக்கம் இருந்த போதிலும் மறைந்த மூத்த நடிகரும் இயக்குனருமான டிபி.கஜேந்திரன், பாடகி வாணி ஜெயராம் இருவரின் உடல்களுக்கும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதற்கும் இச்சங்கம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
எங்கள் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட நன்றி தீர்மானத்தை தங்களுக்கு சமர்ப்பித்து திரையுலகத்திற்கு தங்களின் சேவை மேன்மேலும் சிறக்க வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments