நலிந்த நடிகர்களுக்கு உதவி: நடிகர் சங்கத்தின் தனி அதிகாரியின் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
ஊரடங்கு உத்தரவு காரணமாக நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் நலிந்த நடிகர்கள் வறுமையில் வாடுவதால் நடிகர் சங்கத்தின் தனி அதிகாரி, நலிந்த நடிகர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் பல நடிகர்களிடம் இருந்து எழுந்தன. இந்த நிலையில் நலிந்த நடிகர்களுக்கு உதவி செய்வது குறித்து தற்போது நடிகர் சங்கத்தின் தனி அதிகாரி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு தமிழ்நாடு திரைப்பட நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ரூ1000/. அவரவர் வங்கி கணக்கில் செலுத்த அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில் நடிகர் சங்க உறுப்பினர்கள் ( திரைப்பட நல வாரியத்தின் உறுப்பினர்கள் மட்டும் ) கீழ்காணும் ஆவணங்களை 10 & 11.4.2020. ஆகிய இரு தினங்களுக்குள் nsct2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், மின்னஞ்சலில் அனுப்ப இயலாதவர்கள் 98656 03660, 98417 65110 ஆகிய அலைபேசி வாட்ஸ் ஆப் எண்ணிற்கு போட்டோ, நகல் எடுத்து அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தேவையான ஆவணங்கள்
1. திரைப்பட நலவாரிய புத்தகத்தின் முதல் பக்கம்.
2 வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் (அல்லது) காசோலை.
3. நடிகர் சங்க உறுப்பினர் அடையாள அட்டை.
இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தனி அதிகாரி தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments