அதிமுகவில் இணைந்த கே.பாக்யராஜ்: நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க நோட்டீஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் மற்றும் இயக்குநர் கே பாக்யராஜ் நேற்று ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த நிலையில் நடிகர் சங்கத்திலிருந்து அவரை ஏன் நீக்கக் கூடாது என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த நடிகர் சங்க தேர்தலில் கே பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும் நாசர் தலைமையிலான அணியும் போட்டியிட்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இரண்டு ஆண்டுகளாக எண்ணப்படாமல் இருந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் எண்ணப்பட்டு நாசர் அணி முழுமையாக வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்று கொண்ட நிர்வாகிகள் மற்றும் தேர்தல் குறித்து பாக்யராஜ் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கடிதம் மூலமாக பரப்பி வருவதாகவும், காழ்ப்புணர்ச்சி காரணமாக நடிகர் சங்கத்தின் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் மீது அவர்களது சமூக அந்தஸ்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதால் நடிகர் சங்கத்திலிருந்து கே பாக்யராஜை ஏன் நீக்கக் கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
இந்த நோட்டீஸ்க்கு 15 நாட்களுக்குள் பாக்யராஜ் விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. கே பாக்யராஜ் நேற்று ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவில் இணைந்த நிலையில் இன்று நடிகர் சங்கத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com