பீப் பாடல் குறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை

  • IndiaGlitz, [Monday,December 21 2015]

அனிருத் இசையில் சிம்பு பாடியதாக கூறப்படும் பீப் பாடல் குறித்து பல்வேறு தரப்பில் இருந்து கண்டனக்குரல் எழும்பியபோதிலும், நடிகர் சங்கம் இதுகுறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என சரத்குமார் உள்பட பலர் கேள்வி எழுப்பிய நிலையில் நேற்று நடிகர் சங்கம் இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

'சினிமா என்பது கலைக்கும் 'பலகோடி வியாபாரத்துக்கும் இடையே பயணிக்கிற ஊடகமாக இருக்கிறது.

அதை மக்களும் உணர்ந்தே இருக்கிறார்கள். அதனால் அதற்கு எல்லைகளை தளர்த்தி விரிவாக்கி தந்து இருக்கிறார்கள். அதை உணர்ந்த சினிமா கலைஞர்கள் பலரும் சினிமா ஊடகத்தை திறம்பட பயன்படுத்தி வெற்றியும் பெற்று வருகிறார்கள். அவர்களை மக்கள் தங்கள் வீட்டு பிள்ளைகளாக கொண்டாடியும் வருகிறார்கள்.

ஆனால் அதுவே எல்லை மீறி செல்லும்போதும் முகச்சுளிப்பையும் சினத்தையும் வெளிப்படுத்தி எதிர்ப்பும் எதிர்க்கிறார்கள். முறையாக வெளியிடப்பட்டதா?, திருட்டுத்தனமாக கசிந்ததா? என்ற சந்தேகத்திற்கிடையே சமீபத்தில் அனிருத் இசையமைத்து, சிம்பு எழுதி பாடியதாக வெளியாகியிருக்கும் பாடலில் பீப்' செய்யப்பட்டு கேட்பவர்களின் யூகத்திற்கு விடப்பட்ட வார்த்தைகள் மிக கொச்சையான உணர்வையும், பெண்களை இழிவு படுத்தியும் இருப்பதினால் அது நிச்சயம் கண்டனத்துக்குரியது. கண்டிக்கத்தக்கது.

ஒரு கலைஞனின் கருத்து மக்களிடையே சென்றடைந்து அது எதிர் விமர்சனங்களை ஏற்படுத்துகிறபோது, அது சம்பந்தப்பட்ட கலைஞர்கள் மக்களின் உணர்வை மதித்து வருத்தமோ, மன்னிப்போ கேட்டு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது கடமையாகிறது.

அந்த கலைஞர்களுக்கு கால அவகாசம் கொடுத்து காத்திருந்தோம்.

அதோடு தென்னிந்திய நடிகர் சங்கம் கடந்த ஒரு மாதமாக மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, எல்லா பகுதிகளிலும் இரவு பகல் பாராமல் வேலை செய்து வந்தது. தொடர்ந்து இந்த விஷயத்தில் உடனடியாக கருத்து தெரிவித்தால் கடந்த தேர்தலில் எங்கள் அணிக்கு எதிராக சிம்பு தீவிரமாக செயல்பட்டதால் பழிவாங்கும் நடவடிக்கையாக விமர்சனம் வந்துவிடக்கூடாது என்று எங்கள் கருத்தாக இருந்தது.

வருகிற 26-ம் தேதியில் நடக்க இருக்கும் செயற்குழுவில் இதுபற்றி விவாதித்து கருத்து தெரிவிக்கலாம் என்றிருந்தோம். ஆனால், சூழ்நிலை கருதி நிறுவனக்குழுவில் முடிவெடுக்கப்பட்டு இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.

இன்று இந்த விவகாரம் மக்கள் மன்றத்தை மட்டுமல்ல, நீதி மன்றத்தையும் சென்றடைந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் விரைவில் இதிலிருந்து விடுப்பட்டு புதுப்பொலிவோடு கலைப்பணி ஆற்ற வரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில் இந்த பீப் பாடல் என்கிற இந்த நிகழ்வு, சம்மந்தப்பட்ட கலைஞர்களுக்கு மட்டுமல்ல, எல்லா கலைஞர்களுக்கும் ஒரு படிப்பினையாக அமைந்துள்ளது.

வருங்காலத்தில் இப்படி மீண்டும் ஒரு சங்கடமான சூழல் உருவாகக் கூடாது என்ற விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பதை இச்சமயத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவுறுத்த விரும்புகிறது.

இவ்வாறு நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News

Amy Jackson to romance Ravi Teja

Actress Amy Jackson, who is currently busy shooting for Rajinikanth starrer Robo 2.0, is being considered to play the leading lady opposite Ravi Teja in his new movie. Director Chakri has approached the actress and has narrated the plot of the film.

Anushka turns house wife

If the reports in the tinsel town are anything to go by, actress Anushka Shetty is gearing up to play a house wife in her next. For the first time, the actress is going to essay the role of Suriya's wife in Singam 3. The film was supposed to begin the shooting from December first week but was postponed due to severe rains in Chennai.

Rajinikanth's overnight stay in '2.0' shooting spot

Last week the shooting of what would become India's costliest film '2.0' (Enthiran sequel) started by director Shankar...

Not even a fortnight over after Salman Khan hit and run case verdict; country witnesses another celebrity son involved in rash driving!

The Bombay High Court judgment in favor of Salman Khan in the hit and run case 2002 may have been welcomed by his fans and the film fraternity but the media and right thinking people had expressed their discontentment.

DILWALE disappoints SRK fans! Is Shah Rukh Khan losing his sheen as a superstar?

It seems Shah Rukh Khan is losing his sheen as a superstar and is on the way downwards like the previous superstars Amitabh Bachchan, Rajesh Khanna and Dilip Kumar because after CHENNAI EXPRESS (2013) and HAPPY NEW YEAR (2014) once again Shah Rukh Khan has let down his fans with his just released film DILWALE!