close
Choose your channels

நடிகர் சங்க தலைவர் நாசருக்கு கிடைக்கும் கெளரவ பட்டம்

Monday, May 2, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள் இயக்கத்தில் கடந்த 1985ஆம் ஆண்டு 'கல்யாண அகதிகள்' என்ற படத்தில் திரையுலகிற்கு அறிமுகமான நடிகர் நாசர், படிப்படியாக குணசித்திர, வில்லன், கதாநாயகன் வேடங்களில் பல படங்களில் நடித்ததோடு, அவதாரம், தேவதை உள்பட ஒருசில படங்களை இயக்கியும் உள்ளார்.

6 வயதிலிருந்து நாடகத்தில் நடித்து, அதன் பின்னர் சுமார் 30 வருடங்கள் சினிமாவிலும் நடித்துக்கொண்டிருக்கும் நாசர், சமீபத்தில் நடிகர்சங்க தலைவர் பொறுப்பையும் ஏற்றார். தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளீல் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நாசருக்கு தற்போது அவரது கலைச்சேவையை பாராட்டி வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது.
மே 7ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ள பிரமாண்டமான விழாவில் நாசருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. இந்த விழாவில் வேல்ஸ் பல்கலைகழக நிறுவன வேந்தர் டாக்டர். ஐசரி k.கணேஷ் தலைமையேற்று அவருடன் உச்சநீதிமன்ற நீதிபதி திரு.ஜெஸ்டி செலமேஸ்வர் சிறப்பு விருந்தினராக உரையாற்ற, முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி மாண்புமிகு டாக்டர் .P.S.சவ்ஹான் அவர்கள் டாக்டர் பட்டம் வழங்க உள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment