நடிகர் சங்கத்தலைவர் நாசர் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை

  • IndiaGlitz, [Monday,September 30 2019]

நடிகர் சங்க தலைவர் நாசர் சற்றுமுன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்‌ கலைஞர்கள்‌ சங்கமும்‌ சென்னை கேரளா சமாஜமும்‌ இணைந்து அக்டோபர்‌ 2 முதல்‌ 6 ஆம்‌ தேதி வரை சென்னையில்‌ நடத்தும்‌ தென்னிந்திய நாடக விழா அழைப்பிதழ்‌ கிடைக்கப்பெற்றது. மிக்க மகிழ்ச்சி,

அவ்விழாவில்‌ மூத்த நாடசு கலைஞர்களும்‌ தென்னிந்திய நடிகர்‌ சங்க உறுப்பினர் திருமதி. கமலா மற்றும்‌ திரு காஞ்சி சிவராஜ்‌ ஆகியோர்கள்‌ பங்கேற்பதும், 13 நாடக குழுக்கள்‌ நாடகங்களை நிகழ்த்துவதும்‌. அதில்‌ 800 நாடக கலைஞரகள்‌ பங்கேற்பதும்‌. அவ்விழாவின்‌ அரங்கங்களுள்‌ ஒன்றுக்கு இந்தியத்‌ திரைப்படத்துறையில்‌ கின்னஸ்‌ சாதனைப்‌ படைத்த புகழ்பெற்ற நடிகையும்‌ எங்கள்‌ சங்க மூத்த உறுப்பினருமான மறைந்த திருமதி. ஆச்சி: மனோரமா பெயரை சூட்டியிருப்பதும்‌. அந்த அரங்கத்தை மூத்த நடிகையும்‌ எங்கள்‌ சங்க உறுப்பினர்‌ குமாரி சச்சு அவர்கள்‌ திறந்து வைப்பதும் மற்றும் நாடக துறையிலும்‌. திரைந்துறையிலும்‌ பணியாற்றும்‌ நடிகர்‌/ நடிகையர் திரைக்கலைஞர்கள்‌ பங்கேற்கும்‌ நாடக நிகழ்வுகள்‌, இடம்பெறுவதும்‌ கலைஞர்களை ஊக்குவிப்பதற்கு இது போன்ற நாடக விழாக்கள் நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது

மேற்கண்ட நாடக விழாக்கள் மிகவும் சிறப்பாக அமைவதற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம்