வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்.. பவன் கல்யாண் குற்றச்சாட்டுக்கு நாசர் பதிலடி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையிலிருந்து தமிழ் சினிமா உலகினர் வெளியே வரவேண்டும் என்றும் அப்போதுதான் போன்ற உலகளாவிய படத்தை உருவாக்க முடியும் என்றும் சமீபத்தில் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கு பிரபல நடிகர் பவன் கல்யாண் பேசி இருந்தார். அவரது பேச்சு தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகர் சங்க தலைவர் நாசர் இதற்கு பதில் அளித்துள்ளார். அவர் இது குறித்து கூறியதாவது
பிறமொழி நடிகர்கள், தமிழ் படங்களில் பணியாற்ற முடியாது என்கிற தகவல் பரவி வருவது முற்றிலும் தவறானது. இது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால், அதற்கு முதல் ஆளாக நான் தான் எதிர்ப்பு தெரிவிப்பேன்.
தற்போது நாம் பான் இந்திய அளவில், சர்வதேச அளவில் படங்களை எடுத்துக் கொண்டிருப்பதால் பிற மொழியை சேர்ந்த நடிகர், நடிகைகள் இங்கு நடிக்க வைக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே பிறமொழி நடிகர்கள், தமிழ் படங்களில் பணியாற்றக்கூடாது என்கிற தீர்மானத்தை போட வாய்ப்பில்லை.
தமிழ் திரைப்படங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி, தமிழ்நாட்டிற்குள் படங்களை எடுக்க வேண்டும், தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் தான் பயன்படுத்த வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் இங்கு சினிமாவை நம்பி உள்ள தொழிலாளர்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் படங்களில் தமிழ் நடிகர்கள் தான் நடிக்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை.
பிற மொழிகளில் உள்ள திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கு பெருமைமிக்க ஒரு திரையுலகம் தான் தமிழ் சினிமா. வந்தாரை வாழ வைக்கும் ஊர் இது. சாவித்திரி, வாணி ஜெயராம் போன்ற பலர் தமிழ் திரையுலகில் வந்து பிரபலமாகி இருக்கின்றனர். இந்த தவறான தகவலை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒன்றாக படங்களை எடுப்போம் அதை உலக அளவுக்கு கொண்டு செல்வோம்” என நாசர் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com