முதல்வர் ஜெயலலிதாவுடன் நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஆண்டு இறுதியில் சென்னையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் உறவினர்களின் உயிர்களையும், உடமைகளையும் இழந்து தத்தளித்த நிலையில் அவர்களுக்காக உதவி செய்ய பலர் முன்வந்தனர். அந்த வகையில் வெள்ள நிவாரண பணி மற்றும் முதலமைச்சரின் பொது நிவாரண தொகை அளிப்பதில் கோலிவுட் திரையுலகினர்களின் பங்கு முக்கியமானதாக இருந்தது.
இந்நிலையில் நடிகர் சங்க நிர்வாகிகளிடம் திரையுலக நட்சத்திரங்கள் லட்சக்கணக்கில் அள்ளித்தந்த தொகை 1 கோடியே 10 லட்சத்து 25ஆயிரம் ரூபாய் வரை சேர்ந்துள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நடிகர் சங்க நிர்வாகிகளான நாசர், விஷால், கருணாஸ் மற்றும் பொன்வண்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து நடிகர் சங்கத்தின் சார்பில் 1 கோடியே 10 லட்சத்து 25ஆயிரம் ரூபாய் நிதியை அளித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments