புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா. நடிகர் சங்கத்தின் அதிகாரபூர்வ அறிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் கூடிய தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழுவில் நடிகர் சங்கத்திற்கு என புதிய்தாக கட்டப்பட்டும் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா மார்ச் 31ஆம் தேதி நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி தற்போது அடிக்கல் நாட்டுவிழாவிற்கான அழைப்பிதழை முறைப்படி வெளியிட்டுள்ள நடிகர் சங்கம் இதனுடன் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தென்னிந்திய நடிகர் சங்கம் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா சென்னை,தியாகராய நகர், அபிபுல்ல சாலையிலுள்ள நடிகர் சங்க வளாகத்தில் வருகிற மார்ச் 31-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது
இவ்விழாவில் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் விருந்தினராக வருகை தந்து வாழ்த்தி ஆசீர்வதிக்குமாறு நடிகர் சங்க தலைவர் நாசர் வேண்டுகோள் விடுத்துள்ளார் மேலும் இவ்விழாவில் பிரபல திரை நட்சத்திரங்கள்,மூத்த நடிகர் நடிகைகள், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களாக உள்ள அனைத்து மாவட்ட நாடக நடிகர் நடிகைகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments