ஐசர்வேலனின் 29வது நினைவு தின நிகழ்ச்சியில் நடிகர் சங்க நிர்வாகிகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரும், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனருமான ஐசரி கணேஷின் தந்தையுமான நடிகர் ஐசரிவேலன் அவர்களின் 29வது நினைவு தினம் இன்று நடிகர் சங்க வளாகத்தில் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஐசரி கணேஷ், நடிகர் சங்கத்தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, மற்றும் பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, 'ஐசரி கணேஷ் அவர்களின் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும், நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்ற பின்னர் 60க்கும் மேற்பட்ட நலிந்த நடிகர்களுக்கு உதவி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த பணி மென்மேலும் தொடரும் என்று கூறினார்.
எம்.ஜி.ஆர் நடித்த உழைக்கும் கரங்கள், ரஜினிகாந்த் நடித்த 'தனிக்காட்டு ராஜா', தங்கமகன், கமல்ஹாசன் நடித்த 'சிம்லா ஸ்பெஷல், உள்பட பல படங்களில் ஐசர்வேலன் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments