தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை
- IndiaGlitz, [Friday,March 25 2016]
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த நடிகர் சங்கத்திற்கு மட்டுமே கிடைத்த ஒரு பெருமையை சங்கத்தின் துணைத்தலைவர் கருணாஸ் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது இந்தியாவின் பல மாநிலங்களில் பல்வேறு நடிகர் சங்கங்கள் செயல்பட்டு வந்தாலும், தென்னிந்திய நடிகர் சங்கம் மட்டுமே மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நடிகர் சங்கம் என்பதை கருணாஸ் தனது பேச்சின்போது ஆணித்தரமாக பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற அன்று ஏற்பட்ட செலவு முழுவதையும் நட்டி நட்ராஜ் ஏற்றுக்கொண்டதாகவும் உணவு செலவு முழுவதையும் நடிகை ஹன்சிகா ஏற்றுக்கொண்டதாகவும் கூறிய கருணாஸ், சூர்யா ரூ.10 லட்சம் நன்கொடை அளித்ததாகவும் அவர்களுக்கு தனது நன்றிகள் என்றும் கூறினார்.