திமுக பேரணியில் நடிகர் சங்கம் பங்கேற்பா? பரபரப்பு தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 23-ஆம் தேதி திமுக தலைமையில் அனைத்து கட்சிகள் இணைந்து பிரம்மாண்டமான பேரணி ஒன்றை நடத்த உள்ளது. இந்த பேரணியில் கலந்து கொள்ளுமாறு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் மட்டுமின்றி நடிகர் சங்கத்திற்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது
திமுகவின் இந்த அழைப்பு குறித்து கருத்து கூறிய நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் கருணாஸ் கூறியபோது, ‘நடிகர் சங்கம் திமுகவின் பேரணியில் கலந்து கொள்ளுமா அல்லது கலந்து கொள்ளாதா? என அதிகாரபூர்வமாக எங்களால் அறிவிக்க முடியாது. தற்போது நடிகர் சங்கம் தமிழக அரசின் தனிஅதிகாரியின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே திமுகவின் அழைப்பு கடிதம் தனி அதிகாரிக்கு சென்றிருக்கும்
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசருக்கோ அல்லது செயலாளர் விஷாலுக்கோ தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கவில்லை. எனவே இந்த பேரணியில் நடிகர் சங்கம் கலந்துகொள்வது குறித்து எந்த கருத்தும் எங்களால் கூற முடியாது என்று தெரிவித்தார். அதே நேரத்தில் சித்தார்த் போன்ற நடிகர்கள் தங்களுடைய சொந்த விருப்பத்தின் பேரணியில் கலந்து கொண்டால் அதற்கு நடிகர் சங்கம் எந்தவித ஆட்சேபணையும் தெரிவிக்காது என்று கருணாஸ் கூறினார். எனவே நடிகர் சங்கம் திமுகவின் பேரணியில் கலந்து கொள்ளாது என்றே கூறப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments