நடிகர் சங்கத்தின் மற்றொரு மகத்தான உதவி

  • IndiaGlitz, [Monday,March 14 2016]

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்று கொண்ட இளையதலைமுறை நடிகர்கள் நடிகர்களுக்கு மட்டுமின்றி சமுதாய சேவைகளையும், பாதிக்கப்படும் பொதுமக்களுக்கும் உதவி செய்து வருவதையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.


குறிப்பாக சென்னை நகரமே வெள்ளத்தில் மூழ்கியபோது களத்தில் இறங்கி மீட்புப்பணிகள் செய்தது முதல் சமீபத்தில் பாலன் என்ற விவசாயியின் டிராக்டரை வங்கி ஒன்று பறிமுதல் செய்தபோது அவருக்கு நிதியுதவி வழங்கியது வரை பல்வேறு உதவிகளை நடிகர் சங்கமும், நடிகர்களும் தனிப்பட்ட முறையில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூர் பகுதியில் அழகர் என்ற விவசாயி பணநெருக்கடி காரணமாக சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது குடும்பமே தவித்து நிற்கும் நிலையில் நடிகர் சங்கம் அழகர் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளது. நடிகர் சங்கத்தின் இந்த பணி தொடர வேண்டும் என பலர் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

More News

முதன்முதலாக பேயாக நடிக்கும் ராதாரவி

நடிகர் ராதாரவி கடந்த பல வருடங்களாக பல்வேறு கேரக்டர்களை ஏற்று நடித்திருந்தபோதிலும் இதுவரை அவர் பேய் வேடத்தில் நடித்ததில்லை...

விக்ரமின் இருமுகன் - கருடா படங்களின் முக்கிய தகவல்கள்

அரிமா நம்பி' இயக்குனர் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் படப்ப்பிடிப்பு ஏற்கனவே சென்னை மற்றும் மலேசியாவில் நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மார்ச் 20...

'தெறி' இசை வெளியீட்டு விழா குறித்த முக்கிய தகவல்

இளையதளபதி விஜய்யின் 59வது படமும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 50வது படமும் ஆன 'தெறி' படத்தின் இசை வெளியீட்டு விழா...

சிபிராஜின் 'ஜாக்சன் துரை' டிராக்லிஸ்ட்

சிபிராஜ் நடித்த 'ஜாக்சன் துரை' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளீவந்த நிலையில் இந்த படத்தின் டிராக்லிஸ்ட் தற்போது வெளிவந்துள்ளது...

தனுஷ்-கவுதம் மேனன் படத்தின் நாயகி

'கொடி' படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்த தனுஷ் இன்று முதல் தொடங்கியுள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா'...