நடிகர் சங்கம் 64-வது பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,October 03 2017]

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் குறித்த தேதி மற்றும் பிற விபரங்களுடன் கூடிய அறிக்கை ஒன்று இன்று வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தென்னிந்திய  நடிகர் சங்கத்தின் 64-வது பொதுக்குழு கூட்டம் வரும் அக்டோபர் 8-ம்தேதி ஞாயிறு,  மதியம் 2 மணிக்கு சென்னை அண்ணா சாலையிலுள்ள காமராஜர் அரங்கில் நடைபெறும். இதற்கான அழைப்பு அனைத்து  உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்க பட்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் சங்க உறுப்பினர்களான  முன்னணி நடிகர் நடிகைகள் மூத்த நாடக மற்றும் திரைப்பட நடிகர் நடிகைகளும் கலந்து கொள்கிறார்கள். 

நடிகர் சங்கம் தலைவர் M.நாசர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பொது செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்துவார். துணை தலைவர் கருணாஸ் 2016-2017-ம் ஆண்டுக்கான  ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு,செலவு கணக்குகளை வாசித்து ஒப்புதல் பெறுவார். பொருளாளர்   SI. கார்த்தி எதிர்கால பொருளாதார திட்டமிடல் பற்றிய விளக்க உரை  நிகழ்த்த , பொதுச் செயலாளர் விஷால் சங்கத்தின் கடந்த கால செயல்படுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி விளக்கி கூட்டத்தில் ஒப்புதல் பெறுவார். அதனை தொடர்ந்து தலைவர் M. நாசர் தலைமை உரையாற்றுவார். துணை தலைவர்  பொன்வண்ணனின் நன்றி உரையுடன் பொதுக்குழு கூட்டம் நிறைவு பெறும். 

இந்த பொதுக்குழு கூட்ட  அழைப்பிதழ் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் ஏற்கனவே அனுப்பி வைக்கபட்டுள்ளது. உறுப்பினர்கள் அழைப்பிதழ் மற்றும் தங்களது உறுப்பினர் அடையாள அட்டையுடன்  வந்து தவறாமல் பங்கேற்க வேண்டுமென்றும் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் அழைப்பிதழ் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டையுடன் வரும் உறுப்பினர்கள் மட்டுமே பொதுக்குழு நடக்கும் அரங்கில் அனுமதிக்க படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கம்

More News

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100 நாள் திருவிழா ஒருவழியாக முடிந்துவிட்டது. ஓவியா ஆர்மி, ஓவியா புரட்சி படையினர்களின் எதிர்ப்பையும் மீறி ஆரவ் வெற்றி பெற்றுவிட்டார்.

ஓவியாவுடன் மீண்டும் இணைய தயார்: ஆரவ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஆரவ்வுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு ஆரவ் பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் அவர் தேவைப்பட்டால் ஓவியாவுடன் இணைய தயார்.

லைகா நிறுவனத்தின் அடுத்த படத்திற்கு 'UA' சான்றிதழ்

தளபதி விஜய்யின் 'கத்தி' உள்பட பல திரைப்படங்களை தயாரித்துள்ள லைகா நிறுவனம் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் பிரமாண்டமான படமான '2.0' படத்தை தயாரித்து வருகிறது.

திலீப் ஜாமீன் மனு: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

பிரபல மலையாள நடிகை ஒருவரை கடத்தி பாலியல் தொந்தரவு செய்வதற்கு மூளையாக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பிரபல மலையாள நடிகர் திலீப் 86 நாட்களுக்கு பின்னர் ஜாமீன் கிடைத்துள்ளது.

சுற்றுலா பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கம்: உபி அரசுக்கு குவியும் கண்டனங்கள்

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக உலக மக்கள் அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்ட தாஜ்மஹாலை சுற்றுலா மையங்களின் பட்டியலில் இருந்து உத்தரபிரதேச அரசு நீக்கியுள்ளது.