நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

  • IndiaGlitz, [Saturday,November 26 2016]


தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு நாளை மதியம் 2 மணிக்கு சென்னை லயோலா கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சற்று முன் கிடைத்த தகவலின்படி லயோலா கல்லூரி நிர்வாகம் பொதுக்குழு நடத்துவதற்கான அனுமதியை ரத்து செய்து அதற்கான கடிதத்தை நடிகர் சங்கத்துக்கும், காவல் துறைக்கும் அனுப்பியது. இந்த கடிதம் காரணமாக நடிகர் சங்கப் பொதுக்குழுவுக்கு தமிழக காவல் துறை அனுமதி மறுத்துவிட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகர் சங்க உறுப்பினர்கள் உடனே மாற்று ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின்படி சென்னை அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க கட்டிடத்தில் இந்த பொதுக்குழுவை காவல்துறையின் பாதுகாப்புடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி பொதுக்குழுவுடன் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு நிறைவின் தொடக்க விழா, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா ஆகியவை நடத்தப்படும் என்றும், மூத்த கலைஞர்கள் அனைவரும் கவுரவிக்கப்பட்டு விருதுகளும் அளிக்கப்படும் என்று நடிகர் சங்கத்தின் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

More News

இந்திரா காந்தியை பிடல் காஸ்ட்ரோ கட்டிப் பிடித்தது ஏன்? சுவாரஸ்ய தகவல்

அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வெற்றி பெற்றதோடு, கியூபா நாட்டு மக்களுக்கு வாழும் கடவுளாக திகழ்ந்த பிடல் காஸ்ட்ரோ இன்று காலமானார் என்ற செய்தியை பார்த்தோம்.

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு நிர்வாகத்தின் முக்கிய வேண்டுகோள்

நடிகர் சங்க 63வது பொதுக்குழு நாளை பிற்பகல் 2 மணிக்கு சென்னை லயோலா கல்லூரியில் நடைபெறவுள்ளது.

2.0 படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினியின் நெருங்கிய நண்பர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெயலலிதா தோழி சசிகலாவுக்கும் உடல்நலக்குறைவா?

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புதிய ரூபாய் நோட்டாக வரதட்சணை கொடுக்காததால் நின்று போன திருமணம்

ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் பலவித குழப்பங்கள் நாள்தோறும் நாடு முழுவதும் நடைபெற்று வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்