விவசாயிகளுக்காக நடைபெறும் ஏப்ரல் 25 போராட்டம்: நடிகர் சங்கம் முக்கிய முடிவு

  • IndiaGlitz, [Saturday,April 22 2017]

சமீபத்தில் திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஏப்ரல் 25ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு அமைப்புகள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடத்தப்படும் இந்த போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
பல வருடங்களாக இயற்கையாலும், காவிரி பிரச்சனையாலும் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வரும் தமிழக விவசாயிகள், அரசிடம் வாங்கிய கடனை கட்ட முடியாமல், பலரும் தற்கொலை முடிவை நாடி வருகின்றது வேதனை அளிக்கிறது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும். அதை வலியுறுத்தி வருகிற 25ஆம் தேதி அனைத்து கட்சிகள் நடத்தும் அடையாள போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தனது முழு ஆதரவையும் தெரிவித்து கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

பாகுபலி 2-சத்யராஜ் பிரச்சனை: வாட்டாள் நாகராஜ் முக்கிய முடிவு

கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் தான் கூறிய கருத்தால் கன்னட மக்களின் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்வதாக நேற்று சத்யராஜ் அறிவித்ததை அடுத்து பாகுபலி-2 படத்திற்கு எதிரான கன்னட அமைப்பினர் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். இதனால் 'பாகுபலி 2' படத்திற்கு ஏற்பட்டிருந்த பெரிய பிரச்

பணத்துக்காக மட்டுமே கவலைப்படுபவர்கள் கமல்-சத்யராஜ். எச்.ராஜா

உலக நாயகன் கமல்ஹாசனை கடந்த சில நாட்களாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சைக்குரிய வார்த்தைகளை கொண்டு விமர்சனம் செய்து வருவது தெரிந்ததே. ..

'விருமாண்டி' வசனம் மூலம் சத்யராஜை பாராட்டிய கமல்ஹாசன்

கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த காவிரி பிரச்சனை குறித்த கூட்டம் ஒன்றில் நடிகர் சத்யராஜ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவர் மன்னிப்பு கேட்டால் மட்டுமே 'பாகுபலி 2' படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய அனுமதிப்போம் என்று கடந்த சில நாட்களாக கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன...

இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும். பாகுபலி-சத்யராஜ் விவகாரம் குறித்து அன்புமணி

'பாகுபலி' படத்தின் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சத்யராஜ் வருத்தம் தெரிவித்த பின்னரும் கர்நாடகத்தில் ஒருசில கன்னட அமைப்புகள் சத்யராஜின் உருவபொம்மையை எரித்துப் போராட்டம் நடத்தி வருகிறது. இதனை கடுமையாக கண்டித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிடுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப

முடிவுக்கு வந்தது சந்தானம் நடித்து வந்த 'சர்வர் சுந்தரம்'

காமெடி நடிகரில் இருந்து ஹீரோவுக்கு புரமோஷன் ஆகி வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர் சந்தானம் நடித்து வந்த 'சர்வர் சுந்தரம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று மகாபலிபுரத்தில் முடிவடைந்தது...