காஷ்மீர் தாக்குதலின் பதிலடிக்கு ஆதரவு அளிப்போம்: நடிகர் சங்கம் அறிக்கை

  • IndiaGlitz, [Sunday,February 17 2019]

காஷ்மீர் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தீவிரவாத அமைப்பு ஒன்று நடத்திய காட்டுமிராண்டித்தனமான தீவிரவாத தாக்குதலுக்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் 44 பேர் வீரமரணம் அடைந்தனர். மரணம் அடைந்த வீரர்களுக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் இரங்கல் தெரிவித்ததோடு, பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தும் வருகின்றன.

இந்த நிலையில் இந்த கொடூர தாக்குதலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

காஷ்மீர் தீவிரவாதிகளின் தீவிரவாத தாக்குதலில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீர்ர்களுக்கு கண்ணீர் அஞ்சலி. காஷ்மீர் புல்வாமாவில்
ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தீவிரவாத தாக்குதலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறது . இந்த தாக்குதலில் நம் தேசம் காக்க காவல் புரிந்து வந்த ராணுவ வீரர்கள் பலியாகியது நெஞ்சை உறைய வைத்துள்ளது. வீரமரணமடைந்த வீரர்களுக்கு வீர வணக்கத்தோடு கண்ணீர் அஞ்சலி செலுத்தி அவர்களது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறோம்.

இந்த தாக்குதலுக்கு அரசு எந்த வகையில் பதில் அளித்தாலும், அதற்கு ஒட்டுமொத்த நாட்டுடன் நடிகர் சமூகமும் தென்னிந்திய நடிகர் சங்கமும் ஒற்றுமையுடன் ஆதரவளிக்கும் என்பதை தேச பக்தியோடு தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

 

More News

விஷாலின் 48 மணி நேர சாதனை

விஷால், ராசிகண்ணா நடிப்பில் ஏஆர் முருகதாஸின் உதவியாளர் வெங்கட் மோகன் இயக்கி வரும் 'அயோக்யா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சித்துவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

காஷ்மீரில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பு ஒன்று நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீர்ர்கள் பலியான சம்பவம் ஒட்டுமொத்த இந்தியர்களையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

ரஜினி படத்தை பயன்படுத்தி மீம் போட்ட ஆஸ்திரேலியா போலீஸ்

ஆஸ்திரேலியா காவல்துறையும் ரஜினியின் படத்தை பயன்படுத்தி ஒரு விழிப்புணர்வு மீம் ஒன்றை தங்களது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

சுதந்திர போராட்ட வீரரின் தாக்குதல்: பாகிஸ்தான் ஊடகம் செய்தி

காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் நடந்த தாக்குதலால் 44 இந்திய வீரர்களை இழந்த இந்தியா கடும் கோபத்தில் உள்ள நிலையில் பாகிஸ்தான் பத்திரிகை

'பொன்னியின் செல்வன்' படத்தில் இருந்து விலகினாரா விஜய்சேதுபதி?

அமரர் கல்கி எழுதிய காலத்தால் அழியாத காவிய படைப்பான 'பொன்னியின் செல்வன்' வரலாற்று நாவலை பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளதாகவும்,