நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்படும்: நடிகர் ராதாரவி பேட்டி

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி சென்னையில் உள்ள ஜானகி எம்ஜிஆர் கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மனாபன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி மற்றும் பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணி என இரண்டு அணிகளிலும் சேர்த்து மொத்தம் 79 பேர் போட்டியிடுகின்றனர். தலைவர், செயலாளர், பொருளாளர், துணை தலைவர்கள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 29 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு போட்டியிட்ட சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகிய இருவரும் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் அவர்கள் போட்டியிடவில்லை. இந்த நிலையில் இந்த தேர்தல் குறித்து திருச்சியில் பேட்டியளித்த நடிகர் ராதாரவி, 'இது சட்டவிரோதமான தேர்தல் என்பதால் நான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. வருகிற 13 ம் தேதி நீதிமன்றம் மூலம் நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்படும்' என்று கூறினார். ராதாரவியின் இந்த பேட்டி நடிகர் சங்க உறுப்பினர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

More News

'தல 60' படத்திற்காக கெட்டப் மாறிய அஜித்

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அஜித், தனது அடுத்த படமான 'தல 60' படத்திற்கு தயாராகிவிட்டார்.

ரஜினியின் 'தர்பார்' படப்பிடிப்பு முடிவது எப்போது? ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது

'சிந்துபாத்' படத்தின் கதை இதிகாச புராணக்கதையா?

விஜய்சேதுபதி நடித்த 'சிந்துபாத்' திரைப்படத்தின் இசை வெளீயீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய்சேதுபதி பேசியதாவது:

ரஜினி, கமல் ஆதரவு யாருக்கு? விஷால் விளக்கம்

நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் விஷாலின் பாண்டவர் அணி மற்றும் பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணி என இரண்டு அணிகளில் இருந்து போட்டியிடும்

பாக்யராஜ் அணியின் 3 வேட்பாளர் மனுக்கள் தள்ளுபடியா?

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி மற்றும் பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணி