நடிகர் சங்கம் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எப்போது? சென்னை உயர்நீதிமன்றம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் 23ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இருப்பினும் இந்த தேர்தல் சம்மந்தப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததால் இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் சங்கம் தேர்தல் குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கு இம்மாதம் 15ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. மேலும் நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அன்றே முடிவெடுக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் இம்மாதம் 15ஆம் தேதி வாக்கு என்ணிக்கை தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் ‘பாண்டவர் அணியும், பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments