நடிகர் சங்க தேர்தல்: வழிகாட்டும் நெறிமுறைகள் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சங்க தேர்தல் வரும் 18ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி பத்மனாபன் அவர்கள் மேற்பார்வையில் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலுக்கான வழிகாட்டும் நெறிமுறைகள் தற்போது அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி வரும் 18ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முறை தவறி நடக்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர்கள் வாக்குச்சாவடி வளாகத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையர் ஐந்து பேர்களுக்கு மிகாமல் பார்வையாளர்களை நியமித்து கொள்ளலாம் என்றும், அவர்கள் நடிகர் சங்கத்தை சாராத தனி நபர்களாக இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வெளியூரில் இருக்கும் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக தபால் மூலம் வாக்குச்சீட்டுக்கள் அனுப்பப்பட்டு, வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை அனுப்ப தொடங்கியுள்ளதாகவும், மொத்தம் 1,175 தபால் வாக்குச்சீட்டுக்கள் அனுப்பியுள்ள நிலையில், 12 வாக்குச்சீட்டுக்கள் முகவரியில் ஆள் இல்லை என்று திரும்பி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout