நடிகர் சங்கம் தேர்தலை நிறுத்த உத்தரவு: திரையுலகில் பரபரப்பு

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் இந்த தேர்தலை உடனடியாக நிறுத்த மாவட்ட பதிவாளர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறாது என தெரிகிறது.

வாக்காளர் பட்டியலில் குளறுபடி, தேர்தலை நடத்தும் நீதிபதி மீது சங்கரதாஸ் அணியினர் கூறிய குற்றச்சாட்டு, எந்த ஆண்டின் வாக்காளர் பட்டியலை வைத்து தேர்தல் நடத்துவது உள்பட பல குளறுபடிகள் இருப்பதால் இந்த குளறுபடிகளுக்கு முடிவு காணும் வரை தேர்தலை நடத்த கூடாது என மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

சங்க நிர்வாகிகளின் பணிக்காலம் முடிந்த பின்னர் தேர்தல் நடத்தும் முடிவை நிர்வாகிகள் எடுத்துள்ளதாகவும் இது விதிமுறைகளுக்கு முரணானது என்றும் தேர்தலை நிறுத்துவதற்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.

சற்றுமுன்னர் நடிகர் சங்க தேர்தல் விவகாரம் குறித்து கவர்னருடன் பாண்டவர் அணியினர் ஆலோசனை செய்து வரும் நிலையில் திடீரென தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

அரவிந்தசாமியின் 'புலனாய்வில்' இணைந்த பிரபல இயக்குனர்!

நடிகர் அரவிந்தசாமி நடிப்பில் இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கவுள்ள திரைப்படத்தின் டைட்டில் 'புலனாய்வு' என்ற அறிவிப்பு நேற்று வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

'பிக்பாஸ் 3' திட்டமிட்டபடி நடக்குமா? சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கு!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் பேராதரவை பெற்றது.

'தளபதி 63' முதல் அப்டேட்: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

தளபதி விஜய் நடித்து வரும் 63வது படத்தை இதுவரை 'தளபதி 63' என்றே அழைத்து வந்த விஜய் ரசிகர்கள் இனி இந்த படத்தின் உண்மையான டைட்டிலை அழைக்கும் நேரம் நெருங்கிவிட்டது.

பாண்டவர் அணியில் எங்களுக்கு ஸ்லீப்பர்செல்கள் உள்ளனர்.  பாக்யராஜ் அணி

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் விஷாலின் பாண்டவர் அணிக்கு போட்டியே இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்

தடைக்கு பின் சமந்தாவுக்காக முதல்முறையாக குரல் கொடுக்கும் சின்மயி!

பாடகி சின்மயி கடந்த சில மாதங்களுக்கு முன் கவிஞர் வைரமுத்து மீது மீடூ குற்றச்சாட்டு சுமத்திய நிலையில் அவர் திடீரென டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டார்.