நடிகர் சங்க தேர்தல் குறித்த பரபரப்பு தீர்ப்பு: 

நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தல் செல்லாது என அறிவிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது

அதன்படி சற்று முன்னர் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அந்த தீர்ப்பின் படி ந’டிகர் சங்க தேர்தல் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய வாக்காளர் பட்டியலைத் தயாரித்து அடுத்த மூன்று மாதங்களில் நடிகர் சங்க தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்

மேலும் இந்த தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல் தாஸ் என்பவரின் தலைமையில் நடக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி புதிய தேர்தல் நடத்தும் வரை தற்போது உள்ள சிறப்பு தனிஅதிகாரியே நடிகர் சங்க பணிகளை கவனித்து கொள்வார் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

விஷாலின் பாண்டவர் அணி மற்றும் கே பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிட்ட நிலையில் தற்போது அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது