சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்: நடிகர் சங்க வாக்குகள் எண்ண தடையா?

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணலாம் என சற்று முன்னர் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்போவதாக உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதனை ஏற்றுக்கொண்டனர். இருப்பினும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வதாக இருந்தாலும் நடிகர் சங்க தேர்தல் வாக்குகளை எண்ணலாம் என்றும் ஆனால் மூன்று வாரத்திற்கு முடிவுகளை அறிவிக்க கூடாது என்றும் வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர்சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெறும் என்றும் ஆனால் அதே நேரத்தில் முடிவுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்படும் என்றும் தெரிகிறது.