எஸ்.வி.சேகருக்கு நடிகர் சங்கம் கண்டனம்

  • IndiaGlitz, [Friday,April 20 2018]

நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவு செய்ததற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்ட நிலையில் அவருக்கு பத்திரிகைத்துறையில் இருந்து மற்ற துறைகளில் இருந்தும் கண்டனங்கள் குவிந்தன. இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கமும் எஸ்.வி.சேகருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என விளங்கப்படும் ஊடகம் இன்று மக்களை ஒன்றிணைக்கிறது. அப்படிப்பட்ட ஊடகத்துறையில் இன்றைய சூழலில் தைரியமாகவும், முற்போக்கு அணுகுமுறையோடும் பெண்கள் காணப்படுவது பெருமைக்குறியது, போற்றுதற்குரியது. ஆனால் திரு.S.Ve.சேகர் அவர்கள் தன்னுடைய முகநூல் பதிவில் ஊடகத்துறையில் பணிபுரியும் பெண்களை இழிவு படுத்தும் ஒரு செய்தியை பதியவிட்டுருக்கிறார்.

பொதுவாக முகநூலில் நமக்கு வரும்  கருத்து பதிவினை, நமக்கு  உடன்பட்டால் மட்டுமே  நாம்  அதை  மற்றவருக்கு  அனுப்புவோம் . அந்த வகையில் திரு. S.Ve.சேகர் . அவர்கள்  தனக்கு  வந்த பதிவின் கருத்துக்கு உடன்பட்டே மறுபதிவு செய்து இருக்கிறார். அதில் உள்ள கருத்து பதிவிற்க்கு அவர் தார்மீக பொறுப்பு ஏற்று கொள்ள வேண்டும். 

 கலைத்துறையால் சமூகத்தில்  அறியப்பட்ட  இவர் பொறுப்பற்ற முறையில்  பெண்களை இழிவாக பதிவு செய்துள்ளார். இதை  தென்னிந்திய  நடிகர்  சங்கம்  கடுமையாக கண்டிக்கிறது .

More News

'காலா' ரிலீஸ் தேதி: தனுஷ் அதிகாரபூர்வ அறிவிப்பு

ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக் காரணமாக திட்டமிட்டபடி இந்த படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது

26 வயது பெண்ணை காதலிக்கும் 52 வயது நடிகர்

தமிழில் அலெக்ஸ்பாண்டியன், பையா, பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற படங்களிலும் பல பாலிவுட் படங்களிலும் நடித்தவர் நடிகர் மிலிந்த் சோமன்.

சீமானை போல் பொய் சொல்பவரை என் வாழ்நாளில் பார்த்ததில்லை: வைகோ

கடந்த சில நாட்களாகவே சீமான் குறித்து வைகோ திடுக்கிடும் புகார்களை கூறி வருகிறார். பிரபாகரனை வெறும் ஐந்து நிமிடம் மட்டுமே சீமான் பார்த்ததாகவும்

எஸ்.வி.சேகர் வீடு மீது கல்வீச்சு: பத்திரிகையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

எஸ்.வி.சேகர் தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்து பத்திரிகையாளர்கள் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர்.

புதிய வீடு புதிய சவால்கள்

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடந்த போராட்டத்தில் ஐபிஎல் போட்டிகளை சென்னையிலிருந்து மாற்றி,