நடிகர் சங்க கட்டிடம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
Saturday, May 6, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட உள்ள இடத்தில் 33 அடி சாலைப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதி குடியிருப்பு வாசிகளான அண்ணாமலை மற்றும் ஸ்ரீரங்கன் ஆகியோர் இணைந்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார்கள் என்பதை ஏற்கனவே பார்த்திருந்தோம்.
இந்த வழக்கின் விசாரணை சமீபத்தில் நடந்தபோது, 'இந்த வழக்கு முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கட்டிடத்தை ஆய்வு செய்யாமல் மாநகராட்சி எப்படி அனுமதி கொடுத்தது என்றும் சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட வேண்டிய அவசியம் என்ன?" என்றும் சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக சென்னை மாநகராட்சி, நடிகர் சங்கம், நடிகர் சங்க அறக்கட்டளை ஆகியோர்கள் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த வழக்கின் விசாரணை மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையில் 'பொதுப் பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டத் திட்டம் என்ற புகாரை அடுத்து கட்டுமான பணி மேற்கொள்ள மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவால் நடிகர் சங்க நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments