SPI சினிமாஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்து. விஷால் அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,February 08 2016]

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றபோது விஷால் தலைமையிலான அணியினர் கொடுத்த வாக்குறுதிகளில் மிக முக்கியமானது நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தை SPI சினிமாஸ் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதும் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற விஷால் அணி, புதிய பொறுப்புகளை ஏற்றதும், SPI சினிமாஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் தற்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யும் பணி முற்றிலும் முடிந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த தகவலை நடிகரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். SPI சினிமாஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய பணிபுரிந்த டீமுக்கு நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார்.